முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதம்!! : பின்னணியில் மத்திய அமைச்சர்?

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இரகசிய முயற்சிகள் நடந்து வருகின்றன. விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்யை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டுமென கோரியே இவ் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், வவுனியா முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் நிமிர்த்தம் எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப்போராட்டத்தில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் ஈடுபடவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டதுடன் மேலும் பல அமைப்புகளின் ஆதரவும் கோரப்பட்டிருந்தது.

பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பது உகந்ததல்ல என நிபுணர்குழுவும் தெளிவாக தெரிவித்துவிட்ட நிலையில் சிறியகுழுவினர் அதனை எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கென தெரிவுசெய்த பெரும் பரப்பிலான காணிகளை மத்திய அமைச்சர் ஒருவர் சுருட்ட எத்தனிப்பதாகவும், முதல்வரின் நடவடிக்கை அதனை சீர்குலைத்துவிடும் என்பதால் சிலபல அமைப்புக்களின் பின்னணியில் நின்று முதல்வரிற்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைப்பதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது

Related Posts