முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம்!!

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பயணிகள் போக்குவரத்துக்காக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் இந்த வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts