முகமாலையில் மிதிவெடி அகற்றும் பணி 55 வீதம்வரை பூர்த்தி

BOMS_minsமுகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் 55 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் பெருமளவான மிதிவெடிகள் இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

ஏ – 9 பிரதான வீதியிலிருந்து 200 மீற்றருக்கு இரு மருங்கிலும் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் 55 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாகவும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts