மீள்குடியேற்ற விபரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்ப நடவடிக்கை

appathurai vinayagamoorthyயாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியோர், விடுவிக்கப்படவேண்டிய பகுதி, இராணுவத்தால் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள விபரங்களை எதிர்வரும் மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்பாக அனுப்பிவைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்கள் யாழ். இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஊடாக இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பதாக அவர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor