மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சன் உள்ளிட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்தக் கோரியும், கிளிநொச்சியில் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களுக்கு எதிராகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (04) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

photo 1 (1)

இரண்டாவது தடவையாக இடம்பெறுகின்ற இந்தப் போராட்டத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்ததுடன், போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘இராணுவமே வெளியேறு’, ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, ‘இராணுவமே எங்கள் பொருளாதார வளங்களைச் சுரண்டாதே’, ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளைத் தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

photo 3 (1)

இந்தத் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.