மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ளவும் – பொலிஸார்

High-interest-rateயாழ் குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதினால் அதிகரித்த முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படுகின்றது.

இந்த அதிகரித்த மீற்றர் வட்டியால் நாளாந்தம் யாழ்.மக்கள், வர்த்தகர்கள் பெரும் பாதிப்படைந்து வருவது மட்டுமல்லாது இதுவரை யாழ்ப்பாணத்தில் வட்டிக்கொடுமையினால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எனவே எதற்கும் ஒரு வரையறை உள்ள போது இந்த மீற்றர் வட்டிக்கு ஏன் ஒரு வரையறை இல்லாமல் போனது. இதனால் மக்கள் தமது வீடுவாசல்களையும், நகைகளையும், வாகனங்களையும், கடைகளையும், வட்டிக்காரர்களிடம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வட்டி தொழிலாளர்களுக்கும் பணமுதலைகளுக்கும் நெருக்கிய ஒரு தொடர்பு உள்ளதை மக்கள் அறிந்ததே, எனவே மீற்றர்வட்டிக்கு கொடுப்பவர்களின் கவனத்திற்கு ஒன்றை கொண்டு வர விரும்புகின்றோம்.

உடனடியாக யாழ். சமூகத்தின் நன்மை கருதி மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் ஒரு மனிதாபமான முறையில் வட்டிக்கு வேண்டுமானால் கொடுத்துக் கொண்டு வரையான அதிகரித்த வட்டியை உடன் நிறுத்தா விட்டால் சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்