மீன்பிடிக்கச் சென்றவர் சுழியில் சிக்கி காணாமல் போயுள்ளார்: வடமராட்சியில் சம்பவம்

MP_LOGO_Kவடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சுழியில் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளளது. இதில் ஆழியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் துரைசிங்கம் வயது 57 என்றவரே காணமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவருடன் சுழியில் அகப்பட்ட மீனவர் ஒருவர் சாதுரியமாக நீதிந்திக் கரையேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடென்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor