மீனவர்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செவ்வாய்க்கிழமை (04) அறிவித்தல் விடுத்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானம் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்தது.