மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை : நடிகர் கமல் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

kamal-hassan-to-reunite-with-mani-ratnam

2011 ஆம் ஆண்டு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படை கைது செய்தது.

இவர்களில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து நடிகர் கமல்ஹாஸனிடம் இந்திய ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு கமல் பதிலளிக்கையில்,

இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் எதுவும் இருக்காது. இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும், மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்றும் இந்திய அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி 5 உயிர்களையும் காக்க வேண்டும்.

இல்லையென்றால், இங்கு அரசு என்ற ஒன்று இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.