மீண்டும் சேவையில் குமுதினி படகு

roller-boardநெடுந்தீவு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட குமுதினிப் படகு மீண்டும் நெடுந்தீவுக்கான போக்குவரத்து சேவையில் கடந்த 05ஆம் திகதி முதல் இணைக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சேவையில் விடப்படும் குமுதினிப் படகு கடந்த மாதம் பழுதடைந்ததைத் தொடர்ந்து அதனுடைய சேவை இடை நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் நெடுந்தீவுக்கான போக்குவரத்தில் ஒரு நெருக்கடியான நிலமை காணப்பட்டது. ஏற்கனவே வடதாரகை கப்பல் சேவை கடற்படையினரின் துரிதமான முயற்சி காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் குமுதினிப்படகு பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையினரின் துரித நடவடிக்கைகள் காரணமாக திருத்தம் செய்யப்பட்டு சேவையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நெடுந்தீவுக்கான கப்பல் சேவைகள் அதிகரித்துள்ளமையால் நெடுந்தீவு மக்களின் போக்வரத்து கஸ்டம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor