மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் அலுவலகம், அதிபர் அறை, கணினி அறை, நூலகம் என அனைத்து அறைக்கதவுகளையும் உடைத்த கும்பல் ஒன்று ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி காவலாளியை அச்சுறுத்தி காவலாளியை தாக்கி அவர் கையினை உடைத்தவர்கள் காவலாளி சத்தம் கேட்டு ஊரார் பொலிசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்தவுடன் தப்பி ஓடியுள்ளனர்.
அத்துடன் அப்பிரதேச வீடுகளின் கதவுகளை உடைத்து சேத்தங்களை உண்டாக்கியுள்ளனர். இந்த நிகழ்வானது மீசாலை பிரதேசவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டுபண்ணி உள்ளது.