மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றய தினம் காலை 9 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவத்தில் கே.ரங்கநாதன் (வயது 47), ஆர்.நரேஷ்குமார் (வயது 45), ஆகியோரே படுகாயமடைந்தவராவார். இவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.