தேசிய பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் முகாமைத்துவ வாரத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கோயில் அருகில் இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு இடம்பெறுகிறது.
நிகழ்வை யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்விற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வட மாகாண பிரதி பணிப்பாளர், உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர சபையின் சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 26ம் திகதி முதல் இன்று வரை தேசிய பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் முகாமைத்துவ வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி