மின்கட்டண வர்த்தமானி அறிவிப்பு அடுத்தவாரம்

மின்கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

sri-lanka-minister-pavithra-wanniarachchi

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயற்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 25சதவீத மின்கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், 25 சதவீத மின்கட்டண குறைப்பானது குடியிருப்பாளர்களுக்கு பாரிய நன்மையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 25 சதவீத மின்சார கட்டண குறைப்பு இம்மாதம் (செப்டம்பர்) 16ம் திகதி முதல் அமுலாகும். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்.

இதேவேளை செப்டெம்பர் மாத மின்சார கட்டணத்தில் 25 சதவீதம் கட்டணக்கழிவு பெறாத சகலருக்கும் அடுத்த மாத மின்கட்டணத்துடன் 25 சதவீதம் கழிக்கப்படும்.

இந்த மின்கட்டண குறைப்பு தொடர்பாக நிதி அமைச்சு, மின்வலு சக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை ஆகியன மின்கட்டண குறைப்பு தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

Related Posts