மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்

BOMS_minsமிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகமாலை பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 36 வயதான எல்.இளங்கேஸ்வரி என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

ஹலோ ட்ரஸ்ட் மிதிவெடி அகற்றும் பணியில் பணியாற்றும் குறித்த யுவதி, முகமாலை பகுதியில் மிதிவெடியினை அகற்றிக் கொண்டிருக்கும் போது மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.