மாவை எம்.பிக்கு வரவேற்பு விழா

காங்கேசன்துறை தொகுதி தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட மாவை சேனாதிராஜாவிற்கு வரவேற்பு விழா நடாத்தப்பட்டது.

நேற்று மாலை 4 மணிக்கு தெல்லிப்பழையில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.

விழாவில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

mavai-function

mavai-function-2