மாவீரர்கள் நினைவாக மரங்களை நாட்டுவோம்! – வடமாகாண விவசாய அமைச்சர்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்கள் நினைவாக நவெம்பர்- 27 மாவீரர் தினத்தில் மக்கள் மரங்களை நாட்ட வேண்டுமென வடமாகாண விவசாய கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Ainkaranesan

மேலும் மாவீரர்களை நினைவு கூறமுடியாத நிலையில் நாம் இப்போது உள்ளோம். ஆனால் அவர்கள் நினைவாக மரங்களை நாட்டுவதை இராணுவத்தினரோ வேறு எவரோ தடுக்க இயலாது எனவும் அவர் கூறினார்.

நீர்வேலியில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் ஞாபகார்த்த நூல்நிலையத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.