மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கோபுர அடிக்கல் நாட்டுவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இராஜகோபுரப் பணிக்கான அடிக்கல்லை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நேற்று செவ்வாய்க்கிழமை (22) நாட்டி வைத்தார்.

mavai-1

மேற்படி இராஜகோபுரம் அமைப்பதற்கு வடமாகாண ஆளுநர், 10 இலட்சம் ரூபாவினை ஆலய தர்மகர்த்தாவிடம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (21) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இதனையடுத்து, வடமாகாண ஆளுநரும் அவருடைய பாரியாரும் கலந்துகொண்டு, விசேடபூசை வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி இராஜகோபுரப் பணியானது பல கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

mavai-2

mavai-3

mavai-4