மாவட்ட செயலாளருடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பு

news_ejaffnaஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகை தந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் யாழ் நகரத்தின் முக்கிய இடங்களைப் பார்வையிட்டதுடன் மதியம் 1.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடடிவக்கைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேட்டறிந்துள்ளனர்.

ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ் மாவட்டத்தில் கூடுதலான அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதை தாம் அவதானித்ததாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor