மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அறிவூட்டும் கருத்தரங்கு

jaffna_meetingயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியாலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10.00 மணிக்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது.

இந்த கருத்தரங்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் இணைந்து செயற்படும் பிரதேச ஊடகவியலாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

பேராசிரியர் அரியரத்தன, யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் தில்லைநாதன், 512 ஆவது படைத்தளபதி அஜித் பல்லாவல போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு