மாற்றுத்திறனாளியின் தோட்டம் விசமிகளால் நாசம் : சட்ட நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாநகர முதல்வர் உறுதி

பளை பிரதேசத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருடைய, மிளகாய் செடிகளை மர்ம நபர்கள் பிடுங்கி எறிந்த நிலையில், இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு ஒரு தொகை நிதியையும் வழங்கினார்.

அதேவேளை அவர்களுக்கு சட்ட உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு உரிய உதவிகளும் வழங்க தயார் என பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை , கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் கடந்த 25 ஆம் திகதி விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டன.

விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் இம்முறை 800 மிளகாய் செடிகளை பயிரிட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor