“மாறுதடம்” படத்தை இடைநிறுத்திய பொலிஸார்

சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் மக்களும் இலங்கைக் கலைஞர்களும் இணைந்து நடித்த “மாறுதடம்” திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நிலையில் இடைநடுவில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

maru-thadam

நேற்று யாழ். ராஜா திரையரங்கில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்கிற்கு ரசிகர்களும் பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

rajah

திரையிடப்பட்ட 7 நிமிடங்களில் திரையரங்கிற்குள் நுழைந்த பொலிஸார் படத்தினை நிறுத்துமாறு வற்புறுத்தி படத்தினை இடைநிறுத்தியதுடன் இயக்குநரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவரை யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தெரிவித்துவிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.