மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டண பட்டியல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராயவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நான்கு பேர் கொண்ட குழுவை மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர நியமித்துள்ளார்.
கோவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மின்சாரக் கட்டணப் பட்டியலில் மின் கட்டணம் அதிகரித்துக் கணிக்கப்பட்டிருந்தது என்று பாவனையாளர்கள் முறைப்பாடுகளை வழங்கினர்.
மின் கட்டணப் பட்டியலால் பாதிக்கப்பட்ட மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி கோத்தாபய நேற்றைய அமைச்சரவையில் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்ட மின் பாவனையாளர்களுக்கு இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.