யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் உள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்குதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, குருநகர் பகுதி மக்களுக்கான காணி உறுதி வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டும், இதுவரையில் அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் எந்தக் காலப்பகுதியில் உறுதி வழங்குவதற்கான நடவடிக்கை மாநகர சபையினால் எப்போது மேற்கொள்ளப்படுமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதலளித்த யாழ்.மாநகர ஆணையாளர்,
‘குருநகர் பகுதியில் உள்ள 10 ஏக்கர் காணி புதைகுழியாக பயன்படுகின்றபோதும் காணி இல்லாத மாநகர சபையின் ஊழியர்களுக்கு இக்காணி குடியிருப்புக்காக வழங்கப்பட்டது.
அக்காணியில் இருப்பவர்களுக்கு மாநகர சபையினால் உறுதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு காணி ஆணையாளர் நாயகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என இதன்போது பதலளித்தார்.