மாநகர ஆணையாளராக மீண்டும் பிரணவநாதன்

யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக எஸ்.பிரணவநாதன் நேற்றுத் திங்கட்கிழமை முதல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் யாழ். மாநகர சபை ஆணையாளராகப் பதவி வகித்த இவருக்கு அண்மையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டது.

அரச தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர சபையில் அரசியல் பின்னணியிலேயே அவருக்கு இந்தத் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் மாநகர சபை ஆணையாளராக மீண்டும் பிரணவநாதனை நியமிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண ஆளுநர், மாகாண அமைச்சின் செயலாளர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

மீண்டும் பிரணவநாதனை ஆணையாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர முதல்வரும் கடந்த மாதாந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றுமுதல் மீண்டும் யாழ். மாநகரசபை ஆணையாளராக பிரணவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor