மாதகல் சம்பு நாதேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் வழிபாடுகள்

temple-poojai-kovil-theepamகடந்தகால வன்செயல்களின்போது அழிவடைந்து காணப்பட்ட மாதகல் சம்பு நாதேஸ்வர ஆலயத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகின.

கடந்தகால அசாதரண நிலைமைக் காரணமாக மக்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மீளக் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் இந்த வரலாற்று புகழ்மிக்க ஆலயம் அழிவடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை குறிப்பிட்ட ஆலயத்தில் சிவ தொண்டர் அமைப்பினால் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இவ் பூசை வழிபாடுகளில் பலர் கலந்துகொண்டனர்.