மாதகலில் விபத்து இளைஞர் சாவு

உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து மாதகலில் சனிக்கிழமை முற் பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் வவுனியா கல்மடுவைச் சேர்ந்த விநாயக மூர்த்தி ரமனேஸ்வரன் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார்.

தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் அவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இளைஞரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor