மாணவர் விடுதலையில் சர்வதேச அழுத்தம் தேவை: கஜேந்திரகுமார்

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார்.

பழிவாங்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்.