மாணவர்களுக்கு லேகியம் விற்றவர் கைது

மீசாலை உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு லேகியம் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை நேற்று கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

உசன் பகுதியில் பாடசாலை மாணவர்கள் லேகியம் (குழி) எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக பொலிஸாரிற்குத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், மேற்படி போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இதனை விற்பனை செய்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேற்படி சந்தேகநபர் வியாழக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor