மாணவர்களின் சடலங்கள் ஒப்படைப்பு!! உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!

யாழ். மண்டைதீவு பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டது.

மண்டைத்தீவு கடற்பரப்பில் படகில் பயணம் செய்த மாணவர்கள் ஆறுபேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மாணவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் ஏதேனும் அருந்தியிருந்தனரா என்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மாணவர்களின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Related Posts