மாங்குளத்தில் தனியார் பேருந்து விபத்து, பலர் படுகாயம்

மாங்குளம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சம்பவத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

buss

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி யாழிலிருந்து வவுனியா சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் தடம்புரண்டதில் படுகாயமடைந்த 29வயதான ஆர்.எம். ரத்னாயக்க என்பவர் புளியங்குளம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும்,

புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12பேரில் 06 மாத குழந்தை உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் இந்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த இன்னும் சிலரும் ஓமந்தை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.