மழை, வெள்ளம் காரணமாக யாழில் 1648 குடும்பங்கள் பாதிப்பு

rainயாழ். மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடைமழைக் காரணமாக 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5656 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அவர்கள் நேற்றய தினம் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை பிரதேசத்தில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த 3318 உறுப்பினர்களும் பருத்தித்துறை பிரதேசத்தில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 1003 உறுப்பினர்களும் வேலணை பிரதேசத்தில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 711 உறுப்பினர்களும் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 உறுப்பினர்களும் கரவெட்டி பிரதேசத்தில் 135 குடும்பங்களைச் சேர்;ந்த 571 உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பருத்தித்துறையை சேர்ந்த 4 குடும்பங்களும் சண்டிலிப்பாயை சேர்ந்த 1 குடும்பமும் கரவெட்டி பகுதியில் 1 குடும்பமுமாக 6 குடும்பங்கள் நலன்புரி நிலையத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றதாகவும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.