மல்லாகம் நீதிமன்றக் கூரையில் ஏறி கைதி போராட்டம்

கைதியொருவர் நேற்று மல்லாகம் நீதிமன்றக் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார்.

kaithey-mallakam-court

நீதிமன்ற பணிகள் நிறைவடைந்த பின்னர் இன்று பிற்பகல் 4.45 மணியளவில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்த கைதியே நீதிமன்றக் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த கைதி தனது விடுதலையை உறுதிப்படுத்துமாறும் அதனை நிறைவேற்றத் தவறினால் தான் தற்கொலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்வரன் கைதியுடன் கலந்துரையாடியதையடுத்து குறித்த கைதி நீதிமன்ற கூரையில் இருந்து இறங்கினார்.

இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைதியை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.