மலேசிய விமானம் தவறுதலாக சுடப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

எம்.ஹச்.17 மலேசிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக உடனடி விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரங்கள் குறித்து அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும், இதில் 154 பேர் டச்சுக்கார்கள், 43 மலேசியர்கள் மற்றும் 15 பேர் ஆஸ்திரேலியர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

plane1

அவ்வழியாக செல்லும் மற்ற விமானங்கள் வேறு வழிதடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

தவறுதலாக சுடப்பட்டது :-

ரஷ்ய எல்லையில் விபத்துக்கான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைன் பாதுகாப்பு படையைச் சேர்ந்தது என தவறுதலாக நினைத்து உக்ரைன் பயங்கரவாதிகள் அதனை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

plane3

உலகத்தலைவர்கள் இரங்கல் :-

மலேசிய விமானம் விபத்து குறித்து பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் மலேசிய விமான விபத்துக்குள்ளானது ஒரு கோர சம்பவம் என தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது இரங்கலை தெரிவித்தார்.

ஐ.நா., தலைமையில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டுமென இங்கிலாந்து, ஐ.நா., பொதுச் செயலாளர் பான்கீ-மூன் தெரிவித்துள்ளார்.

plane2

Recommended For You

About the Author: Editor