மற்றுமோரு வழக்குத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட உள்ளார். நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.
கவர்ஸ் கோர்பிரேசன் என்ற நிறுவனத்தின் தலைவராகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ ஹலோ கோப் நிறுவனத்தின் 125 மில்லியன் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொடுக்கல் வாங்கலுக்காக பணம் கிடைக்கப்பெற்ற விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் குற்றம் இழைத்திருப்பதனால் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத்தொடருமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு என்றால் நாமல் உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் சந்தேக நபர் இந்திக்க பிரபாத் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபரை கைது செய்ய சிகப்பு எச்சரிக்கை விடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.