மர்மப் பொருள் வெடித்ததில் இருவர் படுகாயம்

சரசாலை பகுதியில் இன்று (21) காலை மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 27), வர்ணன் பேபிராணி (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். இதில் மனைவி முகத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தங்கள் வீட்டு வளவை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பைக்குள் இருந்து மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சாகவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.