மருத்துவ பீட மாணவன் மரணம்!: கையடக்க தொலைபேசி, CCTV காட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளை

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் சி.இளங்குன்றன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , அவரதுதொலைபேசி மற்றும் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி, யாழ் பல்கலைகழகத்தின் மூன்றாம் வருட மாணவன் சி.இளங்குன்றன் கோண்டாவில் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

கழுத்தில் சுருக்கிட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உயிரிழந்த மாணவனின் சகோதரனும், நியாயமான விசாரணை கோரி ஜனாதிபதி, பிரதமரிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், மாணவனின் மரணம் தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மாணவனின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ், மரணத்தில் சந்தேகமுள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, முறையான விசாரணை நடத்த பொலிசாரை பணிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, உயிரிழந்த மாணவனின் கையடக்க தொலைபேசி மற்றும் வீட்டிலிருந்த சிசிரிவி கமரா கட்சிகளை ஆராய்ந்த அறக்கை சமர்ப்பிக்கும்படி கோப்பாய் பொலிசாரிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor