மயிலிட்டி கடற்றொழிலாளரின் காணி விவரங்கள் திரட்டுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

RegPenவலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மயிலிட்டி கடற்றொழிலாளர்கள் குடும்பங்களின் காணி விவரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் திரட்டப்படுகின்றன.

காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமுகமாக சட்டத்தரணிகள் மூலம் மேற்படி குடும்பங்களின் காணி விவரங்கள் இரு தினங்களாக சேகரிக்கப்பட்டன.

மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வடமராட்சியில் வசித்து வரும் மக்களின் காணி விவரங்களைத் திரட்டி பதிவு செய்யும் நடவடிக்கை வியாபாரி மூலையில் வைத்து மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை நகர சபைத் தலைவரும், சட்டத்தரணியுமான சபா.ரவீந்திரன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராசா நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றார்.

Related Posts