‘மன்னிப்புக் கேட்க வேண்டும் சி.வி.விக்னேஸ்வரன்’

‘இஸ்லாம் மதத்தினைத் தமது அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், அதற்காக முஸ்லிம்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

ahm-azwer

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுப் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் எவ்வாறு தங்களது மதத்தினைப் பின்பற்றுகின்றார்களோ, அதேபோலவே, முஸ்லிம்களும் மதத்தினைப் பின்பற்றுகின்றார்கள். வடமாகாண முதலமைச்சரின் கருத்தானது, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிங்களின் மனங்களையும் புண்படுத்துகின்ற செயற்பாடாகும் இதற்காக அவர், பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor