மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன்: யாழில் சம்பவம்

யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாள்வெட்டுக்கு இலக்காகிய குறித்த நபர் கை மற்றும் வயிற்று பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியசாலையில் வாள் வெட்டுக் காயங்களுக்கு இலக்கானவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாளால் வெட்டிய நபரை நாளை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.