மனைவியைத் தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கணவன் கைது

arrest_1ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தலைமறைவாய் இருந்த அப்பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மே 29ம் திகதி யாழ்ப்பாணம் பூம்புகர் நாவலடிப் பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்து.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். இந்த விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor