வடமாகாண மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் 3 வருடங்களின் பின்னர் இடமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த முதலாம் திகதி தொடக்கம் சுழற்சி முறையிலான இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அத்தியட்சகராகக் கடமையாற்றிய என்.சோதிநாதன் திருகோணமலை மதுவரித் திணைக்கள அத்தியட்சகராகவும், பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அத்தியட்சகராக கடமையாற்றிய கே.தர்மசீலன்
யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அத்தியட்சகராகவும்,
திருகோணமலை மதுவரித் திணைக்கள அத்தியட்சகராகக் கடமையாற்றிய எஸ்.மதன் மோகன் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அத்தியட்சகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய என்.கிருபாகரன் சங்கானை மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகவும்சங்கானை மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ரி.நந்தகுமார் மன்னார் மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகவும்,
மன்னார் மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஆர்.எஸ்.ராஜிர கிளிநொச்சி மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகவும்,
கிளிநொச்சி மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய எஸ்.செந்தூர்ச்செல்வன்யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள சார்ஜன்டாக கடமையாற்றிய எஸ்.யாதவன் மல்லாகம் மதுவரித் திணைக்கள சார்ஜன்டாகவும்
யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள சார்ஜன்டாக கடமையாற்றிய என்.லோகலிங்கன் கிளிநொச்சி மதுவரித் திணைக்கள சார்ஜன்டாகவும்
சாவகச்சேரி மதுவரித் திணைக்கள காவலராகக் கடமையாற்றிய எஸ்.பத்மகுமார் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள காவலராகவும்
மல்லாகம் மதுவரித் திணைக்கள சார்ஜன்ட் மேஜராகக் கடமையாற்றிய பி.அற்புதகுமார் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள சார்ஜன்ட் மேஜராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.