மதுபோதையில் நாயைக் கடித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிப்பு

dog-biteயாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து வேளை அவரைத் துரத்திய நாயை தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாயை கடித்துக் குதறியுள்ளார்.

இதனால் நாய்க்கு முகத்தில் காயமடைந்துள்ளது. அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன்
மயக்கமடைந்துள்ளார்.

அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Recommended For You

About the Author: Editor