மதுபான விலை மீண்டும் அதிகரிப்பு

மதுபானங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக டீ.சி.எஸ்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுகான வரவு-செலவுத்திட்டத்தில் மதுசாரத்துக்கான (ஸ்பிரிட்) இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்தே மதுபானங்களில் விலைகள் கடந்த 25ஆம் திகதி முதல் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் அதிவிசேட மதுபானம் போத்தலொன்று 30 ரூபாவினாலும் ஏனைய மதுபான போத்தல்கள் 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 10ஆம் திகதி கலால் வரி அதிகரிக்கப்பட்டதால் மதுபான போத்தலொன்று 30 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.