மதுபான கடைகளின் அதிகரிப்பே குடும்ப வன்முறைக்கு காரணம்; எஸ்.எஸ்.பி

meeting_jaffna_police_jeffreeyமதுபானக்கடைகளின் அதிகரிப்பினாலேயே யாழ். மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம்.ஜிவ்ரி தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது மதுபானக்கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதுடன் குடிகாரர்களும் அதிகரித்துள்ளனர். தற்போது இளவயதினரே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

இவற்றுக்கும் மேலாக விபத்து, குடும்ப வன்முறை, சுகாதாரம் தொடர்பிலான பிரச்சினைகள் , பிள்ளைகளின் கல்வி பாதிப்படைதல், நீதிமன்ற வழக்குகள் ,குழு மோதல்கள், விவாகரத்து என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேருடுகின்றது.

இவ்வாறான காரணங்களுடனான முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் அதிகளவு பதிவு செய்யப்படுகின்றது.

எனவே சமூகப் பொறுப்புணர்வுடன் அனைவரும் இணைந்து செயற்படுவதனூடாக இவற்றைக் குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.