மதுபானங்களின் விலை ஐந்து வீதத்தால் அதிகரிப்பு!

மதுபானங்களின் விலை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய விலை அதிகரிப்பின்படி ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம் அடங்கிய ஒரு லீற்றர் பியர் 15 ரூபாவாலும் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மதுசாரம் அடங்கிய ஒரு லீற்றர் பியர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய சாராய வகைகள் 90 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிகரெட்டுக்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.