யாழ்.வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் மதில் சரிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்வாய் கிழக்கு பட்டியோடைப் பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான மயில்வாகனம் திலீபன் (வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வீட்டு மதில் பகுதியில் புகையிலை காய வைத்துக்கொண்டிருந்த சமயம் மதில் சரிந்து அவரின் மேல் வீழ்ந்துள்ளது.
அயலவர்களால் மீட்கப்பட்ட அவர், மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும்,சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.