Ad Widget

மதங்களை ஒரு குடையின் கீழ் இணைக்க முடிவு: பிரதி அமைச்சர் குணவர்த்தன

keereemalaiஇலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது’ என்று புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.எ.டி.எஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

‘மதங்களையும் மதங்களில் இருக்கும் கொள்கைகள் அறநெறிகளையும் மக்கள் சரியாக கடைப்பிடித்தால் அமைதியும் அகிம்சையும் ஏற்படும். இவ்வாறு கடைப்பிடிக்க தவறுவதன் காரணமாகவே வன்முறைகள் ஏற்படுகின்றன’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றிக்கிழமை நடைபெற்ற சிவராத்திரி தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘இன்று வடக்கில் இருக்கும் மக்கள் தெற்கிற்கும் தெற்கில் இருக்கும் மக்கள் வடக்கிற்கும் சுதந்திரமாக வருவதற்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிப்பதற்கும் ஏற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

30 வருட துன்பத்தில் இருந்து விடுபட்டு அனைத்து இன மக்களும் அமைதியான முறையில் நிகழ்வுகளை நடத்துவதற்கான சூழலை ஜனாதிபதி இன்று ஏற்படுத்தி தந்துள்ளார் .

இதேவேளை, ‘மதங்களையும் மதங்களில் இருக்கும் கொள்கைகள் அறநெறிகளையும் மக்கள் சரியாக கடைப்பிடித்தால் அமைதியும் அகிம்சையும் ஏற்படும். தற்போது இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடாமகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணரட்ண, யாழ்.மாவட்ட மேதில அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts