மண்டேலாவிற்கு வட மாகாண சபையில் அஞ்சலி

245px-Nelson_Mandela-2008_(edit)முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போதே முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.