மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் இறங்குதுறை ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

batti-palne-1

நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் ஜனாதிபதி பிரயாணம் செய்தமை விசேட நிகழ்வாகும்.

இதன்போது ஜனாதிபதிக்கு விமானப்படை அணிவகுப்பு மரியாதை கிடைக்கப்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்களவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையின் நினைவுப் பதாகை ஜனாதிபதியின் கரங்களினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

புதிய விமான ஓடுபாதை 1560 மீற்றர் தூரத்தைக் கொண்டதுடன் நடுத்தர அளவு விமானங்களுக்குரிய வசதிகளைக் கொண்டதாக இது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் தயா கமகே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணாந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்கள, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

batti-palne-

Related Posts